திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கனிமொழி இன்று தனது 58-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கனிமொழியைத் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘தவெக-வுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி’ என்று விஜய் ஒரு பக்கம் அரசியல் பேசி வந்தாலும், மறுபக்கம் கனிமொழிக்கு போன் செய்து வாழ்த்து கூறியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அரசியல் பகை இருந்தாலும், ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கும் இந்தச் செயல் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.