அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, புதியதாக உருவாக்கப்பட்டு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஜனவரி 03-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். குறித்த அறிவிப்பை தொடர்ந்து பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்று போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, வரும் நிதியாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் கொள்கைகள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.