"சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்க வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின்
Top Tamil News January 07, 2026 09:48 PM

சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி முத்தமிழறிஞர் கலைஞரின் கோட்டை, அது தி.மு.க-வின் எஃகு கோட்டை. சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் கடந்த முறையைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். புதிது புதிதாக யார் வேண்டுமானாலும் வரலாம். ஷோ காட்டலாம். ஆனால் அவர்கள் எல்லாம் அட்டைதான். காற்று அடித்தால் பறந்துவிடுவார்கள். பாஜக உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பணிந்துபோக இது அதிமுக இல்லை. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.