குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நாள்தோறும் அயராது உழைக்கும் ஒரு தாய்க்கு, அவரது மகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி தற்போது இணையத்தில் பலரது இதயங்களையும் நெகிழ வைத்துள்ளது. வெளிநாட்டில் வசித்து வந்த மகள், தனது தாயிடம் சொல்லாமலேயே திடீரென ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். வேலையில் மும்முரமாக இருந்த தாய், எதிர்பாராத விதமாகத் தனது மகளை நேரில் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரையொருவர் நேரில் பார்த்த அந்தத் தருணத்தில், இருவரும் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தக் காட்சிகள் பார்ப்பவர் எவரையும் நெகிழச் செய்யும் விதமாக உள்ளன.
இந்தக் காணொளியைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அந்தத் தாயின் தியாகத்தையும், மகளின் பாசத்தையும் பாராட்டி வருகின்றனர். “உழைக்கும் பெண்களுக்குத் தனது பிள்ளைகளின் அன்புதான் மிகப்பெரிய ஊக்கம்” என்றும், “இவ்வளவு வலிமையான ஒரு தாயைப் பெற அந்த மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றும் உணர்ச்சிப்பூர்வமாகக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் முன்னால் வேறெதுவும் ஈடாகாது என்பதை நிரூபிக்கும் இந்த வைரல் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரது மனதையும் உருக்கி வருகிறது.