ரஜினி நடிப்பி மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தளபதி. ரஜினி கெரியரில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் தளபதி. ரஜினி மற்றும் மம்மூட்டி ஆகிய இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு பற்றி அந்தப் படம் பேசுவதாக இருக்கும். நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் தளபதியாக ரஜினியின் கேரக்டரை மணிரத்னம் வடிவமைத்திருப்பார்.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். குழந்தையாக இருக்கும் போதே தன் அம்மாவால் தனித்துவிடப்பட்ட ரஜினிக்கு மம்மூட்டியின் ஆதரவு கிடைக்கிறது. அதிலிருந்து இருவரும் நண்பர்களாக பயணிக்கிறார்கள். தன்னை எடுத்து வளர்த்த நண்பனுக்காக எதையும் செய்யும் கேரக்டர்தான் ரஜினி. என் நண்பனுக்காக என்னுடைய தாயையே இழக்க தயார் என ஒரு காட்சியில் ரஜினி கூறுவார். அந்தளவுக்கு நட்புக்கு இலக்கணமாக அந்த கேரக்டர் இருக்கும்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் தன் தம்பியான அரவிந்த்சாமியை கொன்றுவிடு என மம்மூட்டி சொல்ல முடியாதுனு சொல்வார் ரஜினி. ஏன் என்று கேட்க, ‘ஏன்னா அது என் தம்பி. எப்படி என்னால் கொல்ல முடியும்?’ என ரஜினி கேட்பார். இந்த ஒரு காட்சி என்னை மிகவும் யோசிக்க வைத்தது என ஒரு பேட்டியில் பாக்யராஜ் கூறியிருக்கிறார். ஏனெனில் விவரம் தெரிந்த நாளில் இருந்து எல்லாமே மம்மூட்டிதான் என்று ரஜினி இருப்பார். நண்பனுக்காக எதையும் செய்ய தயார் நிலையில்தான் அவருடைய கேரக்டரை ஆரம்பத்தில் இருந்து காட்டியிருப்பார்கள்.
ஆனால் தம்பியை கொல்ல வேண்டும் என்று சொல்லும் போது முடியாதுனு எப்படி சொல்லமுடியும். அதற்கு பதிலாக, ‘மம்மூட்டி சொன்னதும் ஒரு புன் சிரிப்புடன் மம்மூட்டி கொடுக்கும் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு அரவிந்த் சாமியை கொல்ல போகணும் ரஜினி. அதன் பிறகு ரஜினியுடன் இருக்கும் ஒரு நபர் மம்மூட்டியிடம் வந்து தளபதி போயிட்டாரா? என்று கேட்கணும். ஆம் என மம்மூட்டி சொல்ல அவர் எதுவுமே சொல்லவில்லையா என்று அந்த நபர் கேட்கணும்’
ஏன்? என்னாச்சு? என மம்மூட்டி கேட்க, இல்ல, அரவிந்த்சாமி அவருடைய தம்பி. நேற்றுதான் தன் அம்மாவை கோயிலில் பார்த்த பிறகு ரஜினிக்கு தெரியும் என அந்த நபர் சொல்லணும். இதை கேட்டதும் மம்மூட்டிக்கு அதிர்ச்சியாகணும். உடனே எனக்காக தன் தம்பியையே கொல்ல துணிந்த என் நண்பனுக்காக அவன் குடும்பத்துடன் அவனை சேர்த்து வைப்பதுதான் என்னுடைய வேலை என்று மம்மூட்டி சொல்லியிருந்தால் அந்த காட்சி பலரையும் உருக வைத்திருக்கும் என பாக்யராஜ் கூறினார்.
இதை ஒரு சமயம் ரஜினி வீட்டிற்கு போயிருந்த நேரத்தில் பாக்யராஜ் ரஜினியிடம் கூறினாராம். உடனே ரஜினி, ‘எப்படி, எப்படி, இப்டி’ என அவர் ஸ்டைலில் உங்களுக்கு யோசிக்க தோன்றியது. நல்லா இருக்கே! சூப்பர் பாக்யராஜ் என பாக்யராஜை பாராட்டினாராம்.