நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் அனுமதி மறுத்தது தொடர்பாகத் தமிழக அரசியலில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இது குறித்துக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சரத்குமார், விஜய்யை நோக்கிப் பல காரமான கேள்விகளை எழுப்பினார்.
"சென்சார் போர்டு ஒரு படத்தை நிறுத்துவது இது முதல்முறை அல்ல. முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில், தனது படச் சிக்கலுக்காக (தலைவா) அவரைச் சந்திக்க விஜய் கைகட்டி நின்றாரே.. அது உங்களுக்குத் தெரியாதா?" என சரத்குமார் கேள்வி எழுப்பினார்.

ஒரு படம் நிறுத்தப்படுவதற்குப் பின்னால் அரசியல் சதி இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். "அனைத்தும் அரசியல் ரீதியாக நடப்பதாக எண்ணுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். தணிக்கை வாரியம் அதன் விதிமுறைகளின்படிதான் செயல்படுகிறது," என்றார்.
"நான் நடித்த 'அடங்காதே' படமும் பல வருடங்களாகத் தணிக்கைச் சிக்கலில் உள்ளது. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை? விஜய் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதால் அவருக்கு மட்டும் தனி சலுகை கிடையாது" என ஆவேசமாகப் பேசினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!