“உங்களுக்கு என்ன அவ்வளவு கொழுப்பா? மோடி இருக்காரோங்கிற தைரியமா?” – அமித்ஷாவைப் பார்த்து சீறிய வைகோ….!!
SeithiSolai Tamil January 10, 2026 01:48 PM

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், பாஜக மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். திராவிட இயக்கம் என்பது தனது நாடி, நரம்பு மற்றும் சுவாசத்தில் கலந்திருப்பதாக உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்ட அவர், திராவிட இயக்கக் கோட்டையை அடியோடி ஒழித்துவிடுவோம் என்று பேசிய அமித்ஷாவிற்கு எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார் என்ற ஒரே தைரியத்தில் இப்படிப் பேசுகிறீர்களா என்றும் அவர் ஆவேசமாக வினவினார்.

தொடர்ந்து பேசிய வைகோ, நாட்டில் ஒரு கூட்டம் மத வெறியோடு அலைந்து கொண்டிருப்பதாகவும், அவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அவர்களை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறினார். திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்று எச்சரித்த அவர், பாஜகவின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.