உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில், முலாயம் சிங் யாதவ் என்ற பூசாரி ஒருவர் பக்தி என்ற பெயரில் செய்த மிகவும் ஆபத்தான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், எரியும் தீக்குண்டத்திற்குள் அந்த நபர் தனது தலையைச் சில நொடிகள் உள்ளே விட்டு எடுக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சரியா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.
இந்தக் காணொளியைப் பார்த்த இணையவாசிகள் பலரும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “இது என்ன மாதிரியான பக்தி? இது வெறும் முட்டாள்தனமும் ஆபத்தான செயலும் ஆகும்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தகைய மூடநம்பிக்கையான மற்றும் உயிருக்கு ஊறு விளைவிக்கும் செயல்களைப் ஊக்கப்படுத்தக் கூடாது என்றும், ஒருவேளை விபரீதம் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.