காஷ்மீரின் தால் ஏரியில் ஷிகாரா படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் குழு ஒன்று, அங்கேயே படகில் காவா (Kahwa – பாரம்பரிய டீ) விற்கும் ஒரு வியாபாரியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வியாபாரி, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று இயல்பாகக் கேட்டார். அதற்கு அந்தச் சுற்றுலாப் பயணி, “நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம்” என்று பதிலளித்தார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த காஷ்மீர் வியாபாரி, உடனே சிரித்துக்கொண்டே, “அப்படியென்றால் நாங்கள் என்ன பாகிஸ்தானில் இருந்தா வருகிறோம்? நாங்களும் இந்தியாவிலிருந்து தான் வருகிறோம்” என்று மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்தார்.
வழக்கமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதுபோன்று பழக்கதோஷத்தில் கூறுவதுண்டு. இருப்பினும், அந்த வியாபாரி கோபப்படாமல், நகைச்சுவையுடன் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.