தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!.. வானிலை மையம் எச்சரிக்கை!...
WEBDUNIA TAMIL January 11, 2026 03:48 AM


தெற்கு கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சுழற்சி நிலவி வருகிறது.

இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்மண்டலம் தற்போது இலங்கையை நோக்கி 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 490 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழுமண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை திரிகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கு இடையே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் சில உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் போன்ற பகுதிகளிலும் இன்று கன மழை பெய்யும் என அறிவித்து ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.