பத்திரிக்கையாளர் பெயரில் திரியும் திமுக கொத்தடிமை செந்தில்வேல் திமுக குண்டர்களை அழைத்து வந்து தாக்குதல் - அதிமுக கடும் கண்டனம்!
Seithipunal Tamil January 11, 2026 10:48 AM

அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்வில், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் திரியும் திமுக கொத்தடிமையான செந்தில்வேல் என்பவரின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்த பாஜக தொண்டர்களை, வெளியில் இருந்து திமுக குண்டர்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

எதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்ள மனமின்றி குண்டர்களை ஏவி, அதையும் ஒரு அமைச்சராக இருக்கக் கூடிய சேகர் பாபுவின் பெயரால் இப்படி ஒரு தாக்குதல் நடத்தியிருப்பது, திமுக எப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியலுக்கு இறங்கிவிட்டது என்பதை காட்டுகிறது.

அதிகார மமதையில் அராஜகம் செய்யும் குண்டர்களின் கூடாரமான திமுக-விற்கு உரிய பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.