இன்றைய கார்ப்பரேட் உலகில் வேலையை விட, திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை விளக்கும் இளம் பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மெட்ரோ ரயிலில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் தொலைபேசி உரையாடலைக் கேட்ட அந்த இளம்பெண், இந்த அதிர்ச்சிகரமான உண்மைகளைப் பகிர்ந்துள்ளார்.அவருக்கு பக்கத்தில் இருந்த பெண், போனில் ஒருவரிடம் மிகவும் கொஞ்சலாகவும், அன்பாகவும் பேசிக்கொண்டிருந்தாராம்.
“>
அவர் பெயர் ‘சச்சின் சார்’. அவர்கள் இருவரும் எங்கே டூர் போகலாம், எப்படி நேரத்தை செலவிடலாம் என்று காதலர்களைப் போல பேசிக்கொண்டிருந்தனர்.
ஆனால், திடீரென்று அந்தப் பெண்ணின் கணவரிடம் இருந்து போன் வந்ததும், அந்தப் பெண் அப்படியே மாறிப்போனார். மிகவும் கோபமாக பேசினார். இதைக் கேட்ட அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
அதுமட்டுமில்லாமல், அந்த சச்சின் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டதாம். வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராதபடி இருவரும் எப்படி ரகசியமாகச் சந்திக்கலாம் என்று பிளான் போட்டுள்ளனர்.
“வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும்” என்று அவர்கள் கவலைப்படுவது போல நடிப்பது, உண்மையில் அவர்கள் செய்யும் துரோகத்தை மறைக்கத்தான் என்று அந்த இளம்பெண் கோபமாகத் தெரிவித்துள்ளார். இன்றைய காலத்தில் உறவுகளில் உண்மை இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது