ஜனவரி 21 வரை நோ ரிலீஸ்.. ரிலீஸ் தேதியை அறிவித்ததற்காக விஜய்யை வறுத்தெடுத்த நீதிபதி – என்ன நடந்தது? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தடை..!!
SeithiSolai Tamil January 11, 2026 10:48 AM

விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.

தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சான்றிதழ் பெறுவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தணிக்கை வாரியத்தின் விதிகளையும் நடைமுறைகளையும் சுட்டிக்காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கு ‘ஜன நாயகன்’ திரைப்படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.