ட்ரம்ப்பை மகிழ்விக்கவே வன்முறை… ஈரானில் நடப்பது போராட்டமா? அல்லது வெளிநாட்டு சதியா?… முடிஞ்சா தொட்டுப் பாரு… உலக நாடுகள் அதிர்ச்சி…!!!
SeithiSolai Tamil January 11, 2026 11:48 AM

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் குறித்து அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். தலைநகர் தெஹ்ரானில் ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அவர், போராட்டக்காரர்களை “நாசக்காரர்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை மகிழ்விப்பதற்காகவே போராட்டக்காரர்கள் தங்கள் சொந்தத் தெருக்களையும் பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகளின் சதி இருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி அரசு பின்வாங்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மறுபுறம், ஈரானில் அமைதியாகப் போராடும் மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டால் அமெரிக்கா சும்மா இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரானிய மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடும் துணிச்சலானவர்கள்” என்று பாராட்டிய அவர், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரான் முழுவதும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ள சூழலில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் டிரம்ப் தலையிடுவதாக காமேனி சாடியுள்ள நிலையில், அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.