வெனிசுலாவில் நிகழ்ந்த அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு பிறகு, அந்நாட்டின் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் எண்ணெய் வளங்களை வாஷிங்டன் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த சூழலில், புதிய விதிகளின் கீழ் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வெனிசுலா எண்ணெயை விநியோகிக்க அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெனிசுலாவிடம் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதியை கோரி அமெரிக்க வெளியுறவு மற்றும் கருவூல துறைகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸின் ஜாம்நகர் ஆலை வெனிசுலாவின் கனரக எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், வெனிசுலா எண்ணெய் இந்தியாவிற்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva