`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி
Vikatan January 12, 2026 10:48 AM

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர்

இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, "காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது, இதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளார். மேலும் முதலமைச்சர் சொல்வது உண்மைதான் சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது" என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.