திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்- கழக மாநில மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது;
''சட்டப்பேரவைத் தேர்தலில் கழத்தின் வெற்றியை பறை சாற்றும் வகையில் மார்ச்-8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 10 லட்சம் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளும் 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்' மாபெரும் கழக மாநில மாநாட்டை நடத்துவதென இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது''. என்று முக்கிய தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.