ஓபிஎஸ் வீட்டில் இரட்டை இலை சின்னம் அகற்றம்!
Dinamaalai March 02, 2026 02:48 PM

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகப்பு இரும்புக் கதவில் பொருத்தப்பட்டிருந்த ஜெ. ஜெயலலிதா உருவப்படமும், இரட்டை இலை சின்னமும் இயந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டன. வீட்டு முகப்பின் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களும் மாற்றப்பட்டுள்ளன.

கடந்த 27ம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர், பின்னர் மு.க. ஸ்டாலின்வை சந்தித்து திமுகவில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் சேர்ந்துள்ளனர்.

திமுகவில் இணைந்த பிறகு முதல் முறையாக நேற்று மாலை தனது சொந்த மாவட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் வந்தார். ஆண்டிப்பட்டி கணவாய், ஆண்டிப்பட்டி, தேனி, போடி உள்ளிட்ட பல இடங்களில் மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அரசியல் மாற்றம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.