மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஒருவர், எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், கடந்த 2022-ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, இயக்குனர் சிதம்பரம் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகையின் இந்தப் புகாரை அடுத்து, எர்ணாகுளம் தெற்கு போலீசார் இயக்குனர் சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தற்போது ஒரு பிரபல இயக்குனர் மீது நடிகை புகார் அளித்திருப்பது மேலும் பரபரப்பை எகிறச் செய்துள்ளது.