“வானில் திடீர் வெடிப்பு!”.. குவைத் வான் பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் வெடித்து சிதறல்.. வைரலான அதிர்ச்சி வீடியோ..!!
SeithiSolai Tamil March 03, 2026 01:48 AM

ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் நாட்டின் வான் பகுதியில் அமெரிக்காவின் F-15 ரகப் போர் விமானங்கள் வெடித்துச் சிதறும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உலகை உலுக்கியுள்ளது.

குவைத் நாட்டின் வான் பாதுகாப்புக் குழு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் பல போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இந்தத் திடீர் சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை என்றாலும், ஈரானுடனான ராணுவ மோதலின் ஒரு பகுதியாக இது நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து சர்வதேச அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.