மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை மேலும் தீவிரமடையச் செய்யும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் மற்றும் ஈரான் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.