TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
க.சே.ரமணி பிரபா தேவி March 04, 2026 03:14 PM

தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தின் மத்தியில் விஜய் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பயிர்க் கடன் தள்ளுபடி

’’5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கும் அதிகமாக உள்ள விவசாயிகளின் பயிர்க் கடனில் 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்ய, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்களின் குழந்தைகளுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்விக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும். அதாவது இலவசமாக கல்வி வழங்கப்படும்’’ என்று விஜய் தெரிவித்து உள்ளார்.

500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேசன் கடை

இவை போக 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேசன் கடை அமைக்கப்படும். ஆண்களுக்கு ஆண் எடையாளர், பெண்களுக்கு பெண் எடையாளர் நியமிக்கப்படுவார் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் விஜய் சார்பில் வழங்கப்பட்டு உள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.