தமிழ்நாட்டில் ஆளுநர் மாற்றம்... புதிய ஆளுநர் நியமனம் ?!
Dinamaalai March 06, 2026 09:48 PM

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென பதவி விலகியதை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் ஆளுநர் பதவி காலியாகியுள்ளது.

இதையடுத்து கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பை தற்காலிகமாக வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக உள்ள அஜய் குமார் பல்லா தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.