“அவர் ஒரு துரோகி மன்னிக்கவே முடியாது!”… ஓபிஎஸ்சை உதறிவிட்டு வந்த வெல்லமண்டி நடராஜன்… இபிஎஸ் கொடுத்த பவர்ஃபுல் போஸ்ட்… திகைப்பில் அரசியல் களம்..!!
SeithiSolai Tamil March 07, 2026 02:48 AM

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த விவகாரம் அவரது ஆதரவாளர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது தீவிர விசுவாசியாக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தற்போது ஓபிஎஸ்-ஸிற்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

“மூன்று முறை முதல்வராக்கிய ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆர்-க்கும் ஓபிஎஸ் துரோகம் செய்துவிட்டார்” என மிகக் கடுமையாகச் சாடிய வெல்லமண்டி நடராஜன், “இனி ஓபிஎஸ்-ஸுடன் பேச்சுக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அவரது வருகையைத் தாராளமாக வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெல்லமண்டி நடராஜனுக்கு உடனடியாக அதிமுகவின் அமைப்புச் செயலாளர் என்ற மிக முக்கியமான பதவியை வழங்கி கௌரவித்துள்ளார்.

ஒருபுறம் திருமங்கலம் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 50,000 பேர் திமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் கசிந்தாலும், வெல்லமண்டி நடராஜன் போன்ற மூத்த தலைவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்குத் திரும்புவது அதிமுக தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.