இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாக தாக்குவதும், அதற்கு ஈரான் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது. மேலும் இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஆயில் டேங்கர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவிலும் எரிபொருள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவினஐஓசி அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. இந்தியாவிடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. சப்ளை மற்றும் விநியோக நெட்வொர்க்குகள் வழக்கம் போல் இயங்குகின்றன.
குடிமக்கள் பீதியடையவோ அல்லது எரிபொருள் நிலையங்களில் கூட்டம் சேர வேண்டாம். துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மற்றும் நம்பியிருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.