”பாகிஸ்தான் காலி…. இந்தியா அட்டாக் பண்ணப் போகுது” ஜோதிடர் சொன்ன அந்த 'பகீர்' டேட்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!
SeithiSolai Tamil March 07, 2026 10:48 AM

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என ஒரு வேத ஜோதிடர் கணித்துள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், “மார்ச் 21, 2026 அன்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த ஜாதகப்படி அதிக வாய்ப்புள்ளது. அன்றைய தினம் ‘அங்காரக யோகம்’ மற்றும் ‘கபர் யோகம்’ உருவாவதால், இந்தியாவின் எல்லை வரைபடம் மாறப்போவது உறுதி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மீண்டும் இந்தியாவுடன் இணையும்” என அவர் அடித்துச் சொல்லியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Acharya Reena Sharma – Vedic Astrologer And Vastu Expert (@paramaksha)