சில காரணங்களால் கைவிட்டு போன கீதா கோவிந்தம் வாய்ப்பு – ஐஸ்வர்யா அர்ஜூன் ஓபன் டாக்
CineReporters Tamil March 07, 2026 06:49 PM

நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படம் மூலம் அறிமுகம் ஆனார். பெரிய நடிகையாக வருவார் என எதிர்பாக்கப்பட்ட அவர் ஏனோ சில படங்களில் மட்டும் நடித்தார். சமீபத்தில் அவரது தந்தை அர்ஜூன் இயக்கத்தில் சீதா பயணம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் கூறுகையில் கீதா கோவிந்தம் அபட வாய்ப்பு எனக்குதான் வந்தது. ஆனால் சில காரணங்களால் அதனை தவிர்த்தேன். அதன் பின் பல நடிகைகளுக்கும் சென்றது. இறுதில் அந்த படம் சூபர் ஹிட் ஆனது. நான் நடிக்க தவறிய பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன என்று கூறினார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

cinereporters.com

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.