வளைகுடாவில் தொடங்கிய 'தண்ணீர் போர்'.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த மரண அடி – தாகத்தில் தவிக்கும் நாடுகள்? உலகையே உலுக்கும் புதிய மோதல்..!!
SeithiSolai Tamil March 09, 2026 11:48 AM

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தற்போது வளைகுடா பிராந்தியத்தில் ‘தண்ணீருக்கான போராக’ உருவெடுத்துள்ளது. மார்ச் 7-ம் தேதி ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து, இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் தற்போது பஹ்ரைனில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ட்ரோன் மூலம் தாக்கியுள்ளது.

வளைகுடா நாடுகள் தங்கள் குடிநீர் தேவைக்குக் கடல்நீரைச் சுத்திகரிக்கும் நிலையங்களையே 60 சதவீதத்திற்கும் மேல் நம்பியுள்ளன. இத்தகைய சூழலில், மக்களின் அடிப்படைத் தேவையை முடக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் இயற்கை நீர் ஆதாரங்கள் மிகவும் குறைவு என்பதால், அங்குள்ள 400-க்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தினசரி பல மில்லியன் கன மீட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஈரானின் இந்த புதிய தாக்குதல் உத்தி, எண்ணெய் வளத்தை விடவும் விலைமதிப்பற்ற தண்ணீரை ஒரு ஆயுதமாக மாற்றியுள்ளது. இந்த மோதல் தொடர்ந்தால், ஒரு பெரிய சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்தால் கூட, சில நாட்களிலேயே கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் அபாயம் ஏற்படும்.

இது வெறும் ராணுவ மோதலாக இல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நீர் பாதுகாப்பிற்கே விடப்பட்ட சவாலாக மாறியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.