பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் March 09, 2026 02:14 PM
- திருச்சி சிறுகனூரில் திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது
- மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு
- விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை இன்று மறு ஆய்வு செய்கிறது மத்திய தணிக்கை வாரியம். இந்த மாதத்திலேயே படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டம்
- தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் 14,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கும் நிலையில், மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
- மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2371 புள்ளிகள் சரிந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம்.
- அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போரால், 2022-ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 110 டாலரை தாண்டி விற்பனை. போர் தொடர்ந்தால் 150 டாலரை தாண்டும் என நிபுணர்கள் கணிப்பு.
- கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அமைதி, பாதுகாப்பிற்காக நாம் கொடுக்கப் போகும் சிறிய விலைதான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து. இதில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் முட்டாள்கள் எனவும் விமர்சனம்.
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் எதிர்ப்பையும் மீறி, ஈரானின் உச்ச தலைவராகவும், மதகுருவாகவும், மறைந்த அலி கமேனியின் மகன் செய்யது மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ளார்.
- டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாம்பியனான நிலையில், அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் தோனி வாழ்த்து. பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அந்த தீவிரம் கலந்த புன்னகை ஒரு ‘கில்லர் காம்போ‘ எனவும் நெகிழ்ச்சி.