தமிழக சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து அரசியல் களம் படு வேகமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிரதான கட்சிகளாக விளங்கும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் அந்த கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைந்தது. இணைந்த நாளன்றே திமுக தலைவர் மு. க. ஸ்டாலினிடம் 10 சட்டமன்ற தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என்று கூறியதுடன் தொகுதிக்கான பட்டியலையும் திமுக தலைமையிடம் பிரேமலதா விஜயகாந்த் சமர்ப்பித்திருந்தார்.
தேமுதிகவுக்கு 8 சட்டமன்ற தொகுதிகள்அதன்படி, திமுக கூட்டணியில் முதல் முறையாக இணைந்திருப்பதாலும், பெண் தலைவர் வேண்டும் என்பதாலும் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை ஒதுக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதில், தேமுதிக கோரிவரும் 10 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகளை குறைத்து 8 தொகுதிகள் வழங்குவது என திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தங்களுக்கும் இதே போன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று போர் கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருச்சியில் இன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக நிர்வாகிகள் மாநாடு.. முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கும் முதல்வர்..
குறைந்த தொகுதிகளை ஏற்க முடியாதுஇதில், கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தற்போது வரை மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படவில்லை. எனவே, புதிதாக இணைந்த தேமுதிகவை விட குறைவான தொகுதி வழங்குவதை எங்களால் ஏற்க முடியாது என்று திமுக தலைமையிடம் அந்த கட்சிகளின் தலைவர்கள் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், கூட்டணிக்காக பல்வேறு கட்சிகள் இருக்கும் நிலையில், கொள்கைக்காக திமுக கூட்டணியில் தொடரும் விசிகவுக்கு கேட்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.
திமுக தலைமைக்கு கடும் நெருக்கடிதிமுகவுக்கு பல்வேறு வகையில் கடும் நெருக்கடிகளை கொடுத்து கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. அதே நேரத்தில், முதல் முறையாகவும், புதிதாகவும் இணைந்துள்ளதால் தேமுதிகவுக்கு 8 தொகுதிகள் வரை திமுக தலைமை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கழக நிர்வாகிகள் கூக்குரல் எழுப்பி வருகின்றனராம். இதனால், திமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: காங்கிரஸ் இஃப்தார் நிகழ்ச்சியில் ‘சீட்’ அரசியல் – பதில் சொல்லாமல் நழுவிய செல்வப்பெருந்தகை