சோகத்திலும் நெகிழ்ச்சி... தாயின் 16 வது நாள் காரியத்திற்கு பொருள் வாங்க சென்றவர் விபத்தில் சிக்கி மூளைச் சாவு... உடல் உறுப்புகள் தானம் செய்து 3 பேருக்கு மறுவாழ்வு!
Dinamaalai March 09, 2026 03:49 PM

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜகோபால். விவசாயத் தொழில் செய்து வரும் இவரது மகன் 29 வயது  பாஸ்கரன் . இதில் பாஸ்கரன்  பேப்பர் ஆலை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார் விசாலாட்சி உயிரிழந்த நிலையில், 16ஆம் நாள் நிகழ்ச்சிக்கான பொருட்கள் வாங்க மனைவி, 11 மாத குழந்தை மற்றும் சகோதரியுடன் உடுமலைப்பேட்டை சென்றிருந்தார்.  

அங்கு பொருட்கள் வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பாஸ்கரன் மட்டும் மிக ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.   இதையடுத்து அவரது குடும்பத்தினர் மனிதநேய முடிவு எடுத்து கண், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புக் கொண்டனர். இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தாயின் 16 வது நாள் காரியத்துக்காக பொருள் வாங்க சென்றவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.