தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் குறித்த ரகசிய தகவல்கள் கசிந்து, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
குறிப்பாக, தவெக தலைவர் நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவர் வடசென்னையின் பெரம்பூர் மற்றும் டெல்டா பகுதியான திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்வுகள் இளைஞர்கள் மற்றும் நகரப்புற வாக்குகளை ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் ஒரு தந்திரமான வியூகமாக பார்க்கப்படுகிறது. மற்ற நிர்வாகிகள் போட்டியிடுவார்கள் என கணிக்கப்படும் தொகுதிகள்:
புஸ்ஸி ஆனந்த்: திநகர்
செங்கோட்டையன்: கோபிசெட்டி பாளையம்
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ்: திருச்செங்கோடு
முன்னாள் அமைச்சர் குப கிருஷ்ணன் : ஸ்ரீரங்கம்
கரூர் விஷயத்தில் கைதான மதியழகன்: கரூர்
சிபி நிர்மல்குமார்: திருப்பரங்குன்றம்
ஆதவ் அர்ஜூனா: வில்லிவாக்கம்
வெங்கட்ரமணன்: மயிலாப்பூர்
ராஜ்மோகன் எழும்பூர்
கட்சித் தலைமை இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த கசிந்த பட்டியல் தவெகவின் பலமான தேர்தல் தயார்நிலையை உறுதிப்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Edited by Siva