தேர்தல் நெருங்கி விட்டாலே அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களை அறிவிப்பார்கள். அதன் நிறைவேற்ற முடிகிறதோ இல்லையோ?.. நிறைவேற்றுவார்களோ? இல்லையோ? ஆனால் தேர்தல் வாக்குறுதி என அறிவிப்பாரக்ள். தமிழக அரசியலைப் பொறுத்தவரை இலவசங்களை கொடுத்து மக்களிடம் ஓட்டு வாங்குவது அரசியல் கட்சிகளின் வழக்கம்.. ஒவ்வொரு கட்சியும் இதை இலவசமாக கொடுக்கிறோம்.. அதை இலவசமாக கொடுக்கிறோம் என சொல்வார்கள்..
ஏற்கனவே தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்து இலவசம்.. மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் என கொடுக்கிறார்கள். இலவசங்களை கொடுக்க மாட்டோம் என்று சொன்ன விஜயும் கூட தேதல் வருவதால் மகளிர் உரிமை தொகை 2500 கொடுப்போம் என சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி 2 ஆயிரைம் கொடுப்போம் என்கிறார்..
இந்நிலையில்தான், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ஒரு படத்தில் பயில்வான் ரங்கநாதன் ஏலம் விடுவார்.. ஆயிரம்.. ரெண்டாயிரம்,, ஐயாயிரம்.. பத்தாயிரம்.. பிம்பிலிக்கா பிளாப்பி’ என சொல்வார்கள்.. அந்த பிம்பிலாக்கி பிளாக்கிதான் இது...
ஸ்டாலின் ஐயா ஆயிரம் கொடுத்தார்.. பழனிச்சாமி ஐயா 2 ஆயிரம் கொடுப்பேன் என்கிறார்.. தம்பி விஜய் 2500 கொடுப்பேன் என்கிறார்.. இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை நாசம் செய்து விட்டார்கள்.. இலவசத்தை வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றி யாரும் பேசுவதில்லை.. அதை பேசும் என்னையும் யாரும் கண்டு கொள்ளவில்லை.. நாடு எப்போது திருந்தும்?’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்..