பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா? கச்சா எண்ணெய் விலை உச்சம்.. மத்திய அரசு சொல்வது என்ன?
WEBDUNIA TAMIL March 10, 2026 11:48 AM

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் குறித்து மத்திய அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் என்ற அளவை தொடாத வரை, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டினால் நிலைமை மாறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அவ்வாறு விலை உயரும் பட்சத்தில், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை தவிர்க்கவும், நாட்டின் நிதி சுமையை குறைக்கவும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

100 டாலர் என்பது ஒரு "லட்சுமண கோடு" போல கருதப்படுவதால், அதற்கு மேல் விலை செல்வது சாமானிய மக்களின் பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். போக்குவரத்து செலவு அதிகரிப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் பேருந்து கட்டணம், ஆட்டோ, டாக்சி கட்டணமும் உயர வாய்ப்பு உண்டு.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.