என்னைப் பொறுத்தவரை டீயும் காபியும் ஒன்று சேராது, ஏனென்றால் சித்தாந்தங்கள் வேறு வேறானவை என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஜய் உடன் கூட்டணி பேச்சு வார்த்தை இல்லை. என்னைப் பொறுத்தவரை டீயும் காபியும் ஒன்று சேராது, ஏனென்றால் சித்தாந்தங்கள் வேறு வேறானவை. விஜயுடனான கூட்டணியை பொறுத்தவரை எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சர்வதேச சந்தையில் போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்க இயலாமல் போகிறது. திமுக தனது கடந்த 2021 தேர்தல் வாக்குறுதி எண் 503ல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் 5 ஆண்டுகளை கடந்தும் இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. டீசல், பெட்ரோல், சிலிண்டர் தடையின்றி கிடைக்க வேண்டும். அ.தி.மு.கவை பா.ஜ.க விழுங்கிவிடும் என்ற முதல்வர் விமர்சிக்கிறார்.அதிமுகவுக்காக முதலமைச்சர் நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அந்தக் கட்சியை பாஜக விழுங்கி விட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார்.