பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil March 11, 2026 01:48 AM

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%

இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 10

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

மாசி~ 26 (10. 3.2026) செவ்வாய் கிழமை.**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ *சிசிர * ருது.
மாதம் ~ மாசி மாஸம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
*திதி ~ இரவு 2.02 am வரை சப்தமி பின் அஷ்டமி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ 7.17 pm வரை அனுஷம் பின் கேட்டை
யோகம் ~ ஹர்ஷனம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.27
சந்திராஷ்டமம்~ மேஷம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ சப்தமி
இன்று * ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (10-3-2026) ராசி பலன்கள் மேஷம்

மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த தொழில்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் நிதானத்துடன் இருக்கவும். வரவுகள் இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : செலவுகள் இருக்கும்.
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

கிருத்திகை : அறிமுகம் உண்டாகும்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : அறிமுகங்கள் ஏற்படும்.

மிதுனம்

பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாகும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிஷம் : மாற்றங்கள் காணப்படும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உருவாகும்.
புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.

கடகம்

நெருக்கமானவரிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : வேறுபாடுகள் குறையும்.
பூசம் : இலக்குகள் பிறக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : லாபம் உண்டாகும்.

கன்னி

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் தீர்வு காண்பீர்கள். சிறு தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சோர்வுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : அனுகூலம் உண்டாகும்.
சித்திரை : தடைகள் மறையும்.

துலாம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் மேம்படும். அடமான பொருட்கள் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உருவாகும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : தாமதம் உண்டாகும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் பகுத்தறிந்து செயல்படும் எண்ணம் உண்டாகும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

விசாகம் : பகுத்தறிந்து செயல்படவும்.
அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.
கேட்டை : திருப்தியின்மை ஏற்படும்.

தனுசு

செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் மூலம் மாற்றம் பிறக்கும். உபரி வருமான குறித்த சாதகமான சூழல் உண்டாகும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மூலம் : வரவுகள் கிடைக்கும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.

மகரம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனை புதிய நம்பிக்கையை தரும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
திருவோணம் : துரிதம் மேம்படும்.
அவிட்டம் : உதவிகள் சாதகமாகும்.

கும்பம்

கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் பிறக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆதாயம் உண்டாகும். பொருளாதார தொடர்பான சிக்கல்கள் குறையும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.

மீனம்

ஆரோக்கிய விஷயங்களில் பொறுமை வேண்டும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். கடன் செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். மற்றவர்கள் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக செயல்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். கால்நடைகள் விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
உத்திரட்டாதி : ஆர்வம் பிறக்கும்.
ரேவதி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

thiruvalluvar deivapulavar தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்

இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

சிந்தனைக்கு..

உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!

உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!

ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.