இன்று நடைபெற்றது தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணலில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களிடம் விஜய் தனித்தனியாக பேசினார்.

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணலில் பெரம்பூருக்கு விரைவில் நான் வருவேன் என விஜய் கூறியுள்ளார். சென்னை பனையூரில் விஜய் நேர்காணல் நடத்தி தவெக சார்பில் நிறுத்தப்படும் ஒவ்வொருவரும் எம்.எல்.ஏ- ஆக வேண்டும். தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால் தவெக வேட்பாளர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டார்.
விஜய் முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பெரம்பூரில் விஜய் போட்டியிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.