நாதக கட்சியின் 'மைக்' சின்னம் ஐஜேகே வசம்; தேர்தல் ஆணையம் அதிரடி..!
Seithipunal Tamil March 11, 2026 05:48 AM

தமிழக சட்ட மன்ற திர்ஹல் ஏப்ரல் 03 வது வாரத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான உத்தியோகபூர்வ தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலையொட்டி எஸ்ஆர்எம் குழுமத்தலைவர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட தனி சின்னம் ஒதுக்கக்கோரி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அக்கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே-விற்கு இந்தத் தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடும் பட்சத்தில் இந்தச் சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியின்  வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பதை தர்தல் நேரத்தில் தெரியவரும், ஏனெனில், அதிமுக கூட்டணியில் உள்ள அக்கட்சிக்கு 05க்கும் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பாஜகவின் 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்டார். அதேபோன்று மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்  ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.