19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி முடிவடையவுள்ளது. இந்த சீசனுக்கான போட்டி அட்டவணை இந்நேரத்தில் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் போட்டிக்கான மொத்த அட்டவணையை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து, 2026 சீசனுக்கான முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி (நாளை மறுதினம்) வெளியிடப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள நாட்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

இந்த சீசனின் முதல் போட்டியும், இறுதிப் போட்டியிடம் நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி. அணிக்கு சொந்தமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம் தமிழகத்தில் ஏப்பரல் 03-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ஏப்ரல் 03-வது வாரத்திற்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மோதும் போட்டிகள் இருக்கும் வகையில் அட்டவணை தயாராக வாய்ப்புள்ளது.