இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமா; ராகுல் பாடியா இடைக்கால தலைவராக நியமனம்..!
Seithipunal Tamil March 11, 2026 06:48 AM

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, உடனடியாக புதிய நிர்வாக இயக்குநர் ராகுல் பாடியாவை இடைக்கால தலைவராக நியமித்துள்ளது.

கடந்த 03 மாதங்களாக இண்டிக்கோ விமான சேவையில் மிகப்பெரிய அளவில் இடையூறை சந்தித்தது. இதனால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.இதனால் டிஜிசிஏ இண்டிகோ நிறுவனத்திற்கு 22.20 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இண்டிகோவின் சிஇஓ-வாக பீட்டர் எல்பர்ஸ் பதவி ஏற்றார். கடந்த டிசம்பர் மாதம் இண்டிக்கோ நிறுவனம் தனது சேவைகளில் கடுமையான குளறுபடிகளை சந்தித்தது. குறிப்பாக விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. 100-க்கும் அதிகமான விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

பல ஆயிரம் விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் இண்டிக்கோ விமான சேவை கடுமையாக முடங்கியது. பயணிகளுக்கும் கடும் அவதி ஏற்பட்ட நிலையில், இது  பீட்டர் எல்பர்ஸ் நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்த சூழலில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.