|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம் | 11.3.2026 | புதன்கிழமை
மாசி~ 27 { 11.3.2026 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ மாசி மாதம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ அஷ்டமி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 9.49 pm வரை கேட்டை பின் மூலம்
யோகம் ~ வஜ்ரம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை
10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.27
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ அஷ்டமி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
thiruvalluvar deivapulavar
இன்றைய (11-3-2026) ராசிபலன்கள்
மேஷம்எதிர்பாராத பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சகோதர்களிடம் சிந்தித்து செயல்படவும். விளையாட்டு செயல்களில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். புதிய மின்னணு மின்சார சாதனங்களில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : பொறுமை வேண்டும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். அரசு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தவறிப் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்களும் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார சிக்கல்கள் குறையும். கீர்த்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : மாற்றங்கள் உருவாகும்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.
தாய்மாமன் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : அனுபவங்கள் கிடைக்கும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்த தன்மை குறையும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மந்த தன்மை குறையும்.
எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
மகம் : எண்ணம் மேம்படும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். இணையம் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு மாற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : மாற்றம் ஏற்படும்.
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும். உத்தியோக செயல்களில் துரிதம் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : துரிதம் உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
வியாபாரத்தில் இடமாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
விசாகம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
வேள்வி பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் பயணங்கள் சென்று வருவீர்கள். நிர்வாக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : சேமிப்புகள் குறையும்.
பூராடம் : மரியாதை அதிகரிக்கும்.
உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும்.
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். புதுமையான விஷயங்கள் மீது ஆர்வம் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு செயல்களில் சிந்தித்து செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : புதுமையான நாள்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உலகில் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். சுபகாரிய செயல்பாடுகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : மனப்பக்குவம் ஏற்படும்.
சதயம் : மாற்றங்கள் பிறக்கும்.
பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.
செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : முதலீடுகள் மேம்படும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
thiruvalluvar
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil