“மதரசாவா? மன்மத கூடாரமா?” மாணவியுடன் மதபோதகர் செய்த கேவலம்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…. நெட்டிசன்கள் காட்டம்….!!
SeithiSolai Tamil March 11, 2026 08:48 AM

வங்கதேசத்தின் ராம்கதி பகுதியில் உள்ள ஒரு பிரபல மதரசாவில் அரங்கேறியுள்ள இந்த விபரீத சம்பவம், ஒட்டுமொத்த கல்வி உலகையும் தலைகுனிய வைத்துள்ளது. அந்த மதரசாவின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த மௌலானா ஷாஹதத் ஹொசைன் ஜமீல், தனது அலுவலக அறையிலேயே மாணவி ஒருவருடன் மிகவும் நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருந்ததாகப் பகீர் புகார் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ ஆதாரத்துடன் விவகாரம் வெளியே கசிந்ததையடுத்து, உள்ளூர் மக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் அந்த மதரசாவை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்மீகம் போதிக்க வேண்டிய இடத்திலேயே இப்படி ஒரு அநாகரீகச் செயல் நடந்திருப்பதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. தற்போது அந்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “இப்படிப்பட்ட கறுப்பு ஆடுகளைச் சும்மா விடக்கூடாது” எனப் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெடித்துக் கிளப்பி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.