நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஏனெனில் மதியம் 12:30 மணிக்கு கரூருக்கு வருவதாக சொல்லிவிட்டு இரவு 7 மணிக்கு தான் விஜய் அங்கு சென்றார் விஜய்.
நேரம் நேரம் ஆக கூட்டம் அதிகரித்துவிட்டது. அவரை பார்ப்பதற்காக பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். விஜய் வாகனத்தில் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெசில் சிக்கி பலரும் மயக்கமடைந்தனர். அவர்களில் பலரும் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது..
இந்த சம்பவம் விஜய் மற்றும் தவெக மீது கரும்புள்ளியாக அமைந்தது. இதையடுத்து திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் விஜயை மற்றும் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த வழக்கில் மூன்று முறை டெல்லிக்கு நேரில் சென்று சிபி விசாரணையில் விஜய் கலந்து கொண்டார்.
ஒருபக்கம் கரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளில் விஜய் சென்றபோது அவரை பார்ப்பதற்காக கூடியிருந்த கூட்டத்தை ஜனநாயகன் படத்தில் பயன்படுத்த திட்டமிட்டு ஷூட்டிங் நடந்ததாக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கோபால் ‘கரூர் சம்பத்தில் விஜய் திட்டமிட்டு செய்தது மக்களுக்கு செய்த துரோகம்.. விஜய்க்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டுமென்றால் என்னையும் அழையுங்கள்.. மக்களின் உயிரை வைத்து படப்பிடிப்பு நடத்திய பல ஆதாரங்களை என்னிடம் இருக்கிறது.. விஜய் கைது செய்ய வேண்டும்’ என பொங்கியிருக்கிறார்.