தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதில் லாஸ்பேட்டை தொகுதியில் சாமிநாதன், காரைக்கால் தெற்கில் அசனா, நெட்டப்பாக்கத்தில் பெரியசாமி மற்றும் முத்தியால்பேட்டையில் பிரகாஷ் குமார் ஆகியோர் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் விலகிய முன்னாள் அமைச்சர் சாய் சரவணனுக்கு, தவெக சார்பில் திருபுவனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசியல் களத்தில் விஜய்யின் இந்த வேட்பாளர் பட்டியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.