'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' - சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்!
Vikatan March 23, 2026 02:48 AM

'Roar 26' சி.எஸ்.கே ரசிகர்களுக்காக அணி நிர்வாகம் ஒரு சிறப்பு நிகழ்வை சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் சென்னை அணியின் முன்னாள் 'OG' வீரர்கள் ஒரு அணியாகவும், இப்போதைய வீரர்கள் ஓர் அணியாகவும் திரண்டு ஒரு போட்டியில் ஆடியிருந்தனர்.

Dhoni with CSK OG Team

போட்டியின் விதிமுறைப்படி OG வீரர்கள் பேட்டிங் ஆட வேண்டும். தற்போதைய வீரர்கள் பௌலிங் செய்ய வேண்டும். ஆளுக்கு ஒரு ஓவர். விதிமுறைகள் இப்படி இருந்தாலும், இது ஜாலியான சேலஞ்ச் என்பதால் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ரகளையாகவே ஆடினர்.

CSK வின் OG வீரர்கள் :

பார்த்திவ் படேல், சுரேஷ் ரெய்னா, பாலாஜி, அனிருதா, பத்ரிநாத், ஜகாதி, ஹர்பஜன், ஹேடன், ஹஸ்ஸி, முத்தையா முரளிதரன், முரளி விஜய், அம்பத்தி ராயுடு, பிராவோ, ஜோகிந்தர் சர்மா

முதல் சேலஞ்சாக மைக் ஹஸ்ஸிக்கு ருத்துராஜ் பந்துவீச ஓவரின் 6 பந்துகளையும் பவுண்டரியாக்கி 'Real OG' ஆக அவதாரமெடுத்து அசத்தினார் ஹஸ்ஸி.

Dhoni - Raina

தோனியின் பேட்டோடு சேலஞ்சுக்கு வந்த சுரேஷ் ரெய்னா ஸ்ரேயாஸ் கோபாலின் ஓவரில் 5 பவுண்டரிக்களை அடித்து அசத்த தோனி அவரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சஞ்சு சாம்சனுக்கு முத்தையா முரளிதரன் பந்து வீசினார். சாம்சனால் இந்த ஓவரில் 2 பவுண்டரிக்களை மட்டுமே அடிக்க முடிய, சேலஞ்சில் வென்ற ஒரே பௌலர் ஆகினார் முத்தையா முரளிதரன்.

அம்பத்தி ராயுடுவுக்கு பிராவோ பந்து வீசிய போது அம்பயர் ஒரு ஒயிடு கொடுத்தார். தோனி அதற்கு ஜாலியாக ரிவியூவ் எடுக்கவே, ஆர்.ஜே.பாலாஜி தேர்டு அம்பயர் போல மிமிக்ரி செய்து கலகலப்பாக்கினார்.

இந்த சேலஞ்ச் முடிந்தவுடன் சிவம் துபே, சஞ்சு சாம்சன், ஆயுஸ் மாத்ரே (U19) ஆகியோருக்கு உலகக்கோப்பையை வென்றதற்காக தோனி நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதன்பின், சென்னை அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறி சிஎஸ்கே ஜெர்சியை ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.