தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தஞ்சாவூர் வந்திருந்தபோது அவரைப் பின்தொடர்ந்து சென்ற கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விஜய் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தனது அபிமானத் தலைவரை மிக அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 19 வயது கல்லூரி மாணவரான விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் விஜய்யின் காரைப் பின்தொடர்ந்து அதிவேகமாகச் சென்றுள்ளனர்.
எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற மற்றொரு பைக் மீது மோதியதில், விக்னேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். மகிழ்ச்சியாகத் தொடங்கிய விஜய்யின் தஞ்சை வருகை, இப்படி ஒரு சோகமான மரணத்தில் முடிந்தது அவரது குடும்பத்தினரையும் கட்சித் தொண்டர்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.