தஞ்சையில் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்துக்குள்ளான விக்னேஷ் உயிரிழப்பு
Top Tamil News March 24, 2026 12:48 AM

தஞ்சை செங்கிப்பட்டியில் மார்ச் 4ஆம் தேதி விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

நடிகர் விஜயை பார்க்க இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து விபத்தில் சிக்கிய 5 பேரில் படுகாயமடைந்தவர்களில் பால் வியாபாரி பாண்டியன் என்பவரின் மகன் விக்னேஷும் ஒருவர். கல்லூரிக்கு போன மகன் நடிகர்  விஜயை பார்க்கசென்று  விபத்தில் சிக்கி தலையில்  படுகாயத்துடன் சிகிச்சைபெருவதாக விக்னேசின் தந்தை பால் வியாபாரி பாண்டியன் தெரிவித்திருந்தார். தஞ்சையில் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த விக்னேஷை, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து மருத்துவச் செலவை ஏற்றார். தஞ்சை செங்கிப்பட்டியில் மார்ச் 4ஆம் தேதி விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் உயிரிழந்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.