மீன் மற்றும் சாதம்" என்பது வங்காளிகளின் உணவு பழக்கம் மட்டுமல்ல, அது அவர்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் இந்த உணவு அரசியல் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்காளிகளின் அசைவ உணவு பழக்கத்தில் தலையிடும் என்றும், 'சைவ உணவை திணிக்க முயலும் என்றும் விமர்சித்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக வேட்பாளர்கள் தாங்கள் மீன் சாப்பிடும் காட்சிகளை படம்பிடித்துப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பிதான்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரத்வத் முகோபாத்யாய், ஒரு படி மேலே சென்று கட்லா மீனை கையில் ஏந்தியபடி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
பாஜக ஒருபோதும் மீன் அல்லது இறைச்சிக்குத் தடை விதிக்காது" என்று அவர் உறுதியளித்தார். வங்காள கலாச்சாரத்தில் மீன் என்பது சுப காரியங்களின் அடையாளம் என்பதால், மக்களின் உணர்வுகளைக் கவர இரு கட்சிகளும் மீன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மாட்டிறைச்சி விற்பனைக்கு மட்டும் தடை விதிக்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் ஷாமிக் பட்டாச்சார்யா தெளிவுபடுத்தியுள்ளார்.
Edited by Siva