அதிமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், சென்னை கோடம்பாக்கத்தில் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி பரத் என்பவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திமுக அனுதாபி ஞானசேகரன் முதல் திமுக நிர்வாகி பரத் வரை, ஆளுங்கட்சி முகமூடியில் வலம் வரும் காமுகர்களால் தமிழகப் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கானல்நீராகியுள்ளது. தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் திமுக நிர்வாகிகளின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்கதையாகின்றன.
தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளைக் கூடக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல், சட்டம் ஒழுங்கைச் சவக்குழியில் தள்ளிவிட்ட பொம்மை முதலமைச்சர் @mkstalin அவர்களால் கடந்த ஐந்தாண்டு காலம் தமிழ்நாடு சீரழிந்தது போதும்.
பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய திமுக ஆட்சியை மட்டுமல்ல, பெண்கள் பொதுவெளிக்கு வருவதற்கே அஞ்சி நடுங்கும் அளவிற்குச் சூழலை உருவாக்கிய திமுக என்ற கட்சியையும் அடியோடு வீழ்த்துவதே தமிழகப் பெண்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு என்று பதிவிடப்பட்டுள்ளது.