உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுங்க!. பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்த திமுக?!..
WEBDUNIA TAMIL March 26, 2026 01:48 AM


விஜயகாந்தின் மறைவுக்குப் பின் தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா மாறினார். திமுகவுடன் கூட்டணி அமைப்பது தேமுதிக நிர்வாகிகளின் விருப்பம் என சொன்னாலும் முடிவை பிரேமலத மட்டுமே எடுக்கிறார் என சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதியை எந்த கட்சி கொடுக்கிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி என முடிவெடுத்தார் பிரேமலதா.

ஆனால் பிரேமலதா கேட்டதை கொடுக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார். எனவே திமுகவுடன் பேசினார் பிரேமலதா. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக ஒத்துக்கொண்டது. சமீபத்தில்தான் இது அறிவிக்கப்பட்டாலும் ஏற்கனவே இது முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் அப்போதே அறிவித்தால் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பார்கள் என்பதால் திமுக அதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது..

இந்நிலையில், 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கிடைத்துவிட்டது என்பது மகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக ‘உங்கள் மகன் போட்டியிடும் விருதுநகர் தொகுதி தவிர மற்ற 9 தொகுதிகளிலும் உங்கள் வேட்பாளர்கல் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடட்டும்’ என திமுக சொன்னதால் பிரேமலதா அப்செட்டில் இருக்கிறாராம். ஒருபக்கம் தேமுதிகவுக்கு 2 சதவீதத்திற்கும் கீழ் வாக்கு வாங்கி இருப்பதால் அவர்கள் முரசு சின்னத்தில் போட்டியிட முடியாது எனவும் சொல்கிறார்கள்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.